வணக்கம் 🙏

ஆல்பர்ட் அடைக்கலம்
|
21st செப்டம்பர் 2019
|

எமது அன்புத் தமிழர்களுக்கும் தமிழ் மொழி கற்றுத் தமிழில் எழுத/இணையத்தில் தட்டச்சு செய்ய விரும்பும் அனைவருக்கும் மேலான வணக்கங்கள்.

இவை எமது முதல் வலைப்பதிவு. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தத் "தமிழ் எழுதி" எனும் இணைய தட்டச்சு செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் குறை மற்றும் நிறை இருப்பின் தயவுசெய்து உங்கள் கருத்துக்களை இந்தப் பதிவின் கீழ் பதிவிடவும்.

நன்றி 🙏

குறிச்சொற்கள்:

12 comments on “வணக்கம் 🙏”

 1. ஒரு கட்டுரை டைப் செய்கிறோம். முன்னதை டெலிட் செய்து விட்டு மீண்டும் வேறொன்றை டைப் செய்கிறோம்,இதையும் டெலிட் செய்து விடுகிறோம்.மூன்றாவதாக ஒன்றை டைப் செய்து விட்டு ,முதலில் டைப் செய்த ஃபைல் தேவை என்றால் undo மூன்று முறை கொடுத்தால் முதலில் டைப் செய்தது திரும்ப கிடைக்க வழி செய்ய முடியுமா?

 2. வணக்கம் ஐயா தங்களது தட்டச்சு பலகையின்னூடே நான் பலகாலமாக கட்டுரைகளை தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன்...தங்களது இந்த சேவைக்கு முதற்கண் என் நன்றியும் வணக்கங்களும்...ஐயா ஒரு சிறிய கேள்வி உங்களது இந்த எழுதியில் sri என்பதனை எவ்வாறு எழுதுவது? உதாரணமாக sridevi என‌ தட்டச்சு செய்யவேண்டுமென்றால் எப்படி எழுதவேண்டும்? நன்றியும் வணக்கங்களும்.

  1. வணக்கம் நிதி.
   தமிழ்ச்சொல்லான "திரு" என்பதை கிரந்த எழுத்தில் எழுத முதலில் "தமிழ் விசைப்பலகை" முறையைத் தேர்ந்தெடுத்து "Shift + _" என்று தட்டச்சு செய்தால் "சிறீ" என்ற உச்சரிப்புடைய "ஸ்ரீ" கிடைக்கும். அதன்பிறகு உங்களுக்கு வசதியான தட்டச்சு முறையைத் தெரிவு செய்து தட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம்.

   அம்முறையை நீங்கள் இந்தச் செயல் படத்திலும் காணலாம்: https://media.giphy.com/media/d5emUUNzKj2BaIKDCn/giphy.gif

 3. வணக்கம் ஐயா பதிலளித்தற்கு நன்றி....ஆனால் ஷிப்ட் மற்றும் + அழுத்தினால் எனக்கு ஸ்ரீ என்ற வார்த்தை வரவில்லை....நான் பயன்படுத்துவது பிரஞ்சு மொழி விசைப்பலகை மற்றும் விண்டோஸ் தொகுப்பு 10 கூகுள் குரோம் மற்றும் மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர்களில் முயன்றுவிட்டேன்....நன்றி...வீடியோ வடிவில் செயல்முறை விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.....

  1. விண்டோஸ் இயங்குதளம் உப்யோகிக்கும்போது "தமிழ் விசைப்பலகை" முறையைத் தேர்ந்தெடுத்த பின்பு, "ஷிஃப்ட்" விசையைப் பிடித்துக்கொண்டே (Hold the "Shift" key and then press "Underscore" key) அண்டெர்ஸ்கோர் என்ற விசையை அழுத்தவும். உங்களது பிரெஞ்சு விசைப்பலகையில் அண்டெர்ஸ்கோர் விசை 6 அல்லது 8 இல் இருக்கலாம். எனவே "ஷிஃப்ட்" விசையைப் பிடித்துக்கொண்டே 6 அல்லது 8 எண் என்ற விசைகளை உபயோகித்துப் பார்க்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

அண்மைய பதிவுகள்

ஆவணக்காப்பகம்

நாட்காட்டி

அக்டோபர் 2019
திசெபுவியவெஞா
« செப்  
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

தமிழ் வாழ்க‌

text
HOME
தமிழ் எழுதி - www.tamileditor.org
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது