Jun 042008
சென்ற மாதம் இறுதியில் (மே-16-31,2008) வெளிவந்த “தமிழ் கம்ப்யூட்டர்” என்ற கணினி இதழில் தமிழ் எழுதி பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. அங்கு தமிழ் எழுதி பற்றிய பொதுவான மற்றும் எப்படிப் பயன்படுத்துவது என்ற தகவல் இடம் பெற்றிருந்தது. துரை. தியாகராஜ் என்பவரால் அது தொகுக்கப் பட்டிருந்தது. ஆனால் அங்கு www.tamileditor.org என்ற இணைப்பு இடம்பெறவில்லை. ஒருவேளை அடுத்த இதழில் இடம் பெறலாம்.
தமிழ் எழுதியை உலகறியச் செய்த “தமிழ் கம்ப்யூட்டர்” இதழின் நிர்வாகிக்கு எனது நன்றிகள்.

கயவர்களால் தாக்கப்பட்டது கண்டேன். கூகுள் இந்த தளத்தை மறைத்தபோதும், நான் உபயோகித்துக்கொண்டுதான் இருந்தேன்.
இந்த தளத்தை செம்மையாய் செயல்படுத்திக்கொண்டு இருப்பதற்கு நன்றி