Jan 182008

இணையத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் மின்நூல்கள் ( E -Books ) கிடைக்கின்றன. ஆனால் நமது தாய்மொழியான தமிழில் மின்நூல் என்பது கிடைப்பதற்கு அரிதாகவே இருக்கிறது.காரணம்:

  • மின்நூல் எவ்வாறு உருவாக்குவது என்பது நிறைய பேருக்கு தெரியாது.
  • பலருக்கு தமிழில் மின்நூல் சாத்தியமே இல்லை என்ற எண்ணம்.
  • பெரும்பாலோனோர் அதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.
  • பலர் தமிழில் எழுத முன்வருவதில்லை.

தமிழில் மின்நூல் தயாரிப்பது எப்படி?

மிகவும் எளிமை தான். யான் இதைத்தான் 2 வருடங்களாக பயன்பத்தி வருகிறேன்.

தேவை:
சாதாரண ( MS Word ) கோப்பை மின்நூலாக மாற்றுவதற்கான மாற்றி ( PDF Converter ). இதற்கு பிரிமோ பிடிஎஃப் என்ற செயலி உதவுகிறது.

வழிமுறைகள்:


-> முதலில் MS Word ல் தட்டச்சு செய்யவேண்டியதை செய்து விடுங்கள்.
-> பிறகு MS Wordன் File Menu சென்று Print என்பதைச் சொடுக்கவும்.
-> இப்போது ஒரு குறுந்திரை உருவாகியிருக்கும். அதில் Name என்பதில் Primo PDF என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அதில் எத்தனை நகல் வேண்டும் என்பதையும் கொடுக்கலாம்.

(இவ்வாறு தயாரிக்கப் படும் மின்நூல் எங்கு சென்று சேமிக்கப் பட வேண்டும் என்பதனை தனியாக பிரிமோ பிடிஎஃப் செயலியை திறந்து மாற்றிக் கொள்ளலாம்.)

பொதுவாக மின்நூல் என்பது தானியங்கி கோப்பாக (PDF: Portable Document Format ) மாற்றப் பட்டு பயன்படுத்த்ப் படுகிறது. இவ்வாறு மாற்றப் பட்ட மின்நூலைப் படிக்க பயனர்களின் கணிணியில் (PDF Reader ) கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு அடோப் மின்னூல் ( Adobe Reader) படிப்பான் உதவுகிறது.

பதிவிறக்கங்கள்:

பிரிமோ பிடிஎஃப் ( மின்நூல் மாற்றி )
அடொப் ரீடர் ( மின்நூல் படிப்பான் )

மேலும் இது தவிர அடோப் நிறுவனமே தனியாக அக்ரோபாட் என்ற செயலியை மின்நூல் தயாரிக்க வெளியிடுகிறது. ஆனால் இதை காசு கொடுது வாங்க வேண்டும். இது தவிர மற்ற முறைகள் இருந்தால் வரும் நாட்களில் இங்கு பதிகிறேன்.

12 Responses to “தமிழில் மின்னூல் தயாரிப்பது எப்படி”

  1. Gunaseelan Rajadurai says:

    Its really good job !

  2. karthik says:

    i want tamileditor software

  3. karthik says:

    karthik Says: Your comment is awaiting moderation.

  4. karthik says:

    want tamileditor software

  5. இராஜராஜன் says:

    வணக்கம்

    தங்கள் பதிவு மிகவும் உதவியாக இருந்த்து,

    நானும் தமிழ் மின்னூல் பற்றிதான் யோசித்துக்கொண்டிருந்தேன்

    நன்றி

  6. உங்கள் அனைவருடைய‌ கருத்துக்களுக்கும் நன்றி.

  7. கார்த்திக் எந்த உபயோகத்திற்கு தமிழ் மென்பொருள் தேவை என்று சொல்லவில்லையே.

  8. leoamalraj.j says:

    i want tamil editor software.

  9. raj says:

    i saw this blog accidently while going throu some rss feeds in tamil. fine.. i have a link to download cracked adobe pdf reader.. if u need it, i will post it here

  10. Panner says:

    வணக்கம்,

    தமிழ் எழுதிக்கு எனது நன்றி.

    I want to create Tamil document in PDF format using Php,
    somebody can help me in this regards ?

    Nandri,
    Paneer

  11. sathish says:

    vankkam tamil vazha

Leave a Reply

(required)

(required)